விஜய்யை கலாய்க்கும் யோசனைகள்
விஜய்யை கலாய்க்கும் யோசனைகள்
கடந்த சில வாரங்களாக இணையதள கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் விஜய். பிரஸ்மீட் ஒன்றில் 'சைலண்ட்' என அவர் சத்தம்போட்ட வீடியோ கிளிப்பிங்ஸ் வெளியானது. அதனைத்தொடர்ந்து விஜய்யுடன் படம் பார்க்கும் கவுண்டமணி சொல்லும் கருத்துக்கள் வயிற்றை பதம் பார்த்துவரும் வேளையில், விஜய்யின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தும் யோசனைகள் என்ற பெயரில் வெளியாகியுள்ள ஒரு செய்தி விஜய் ரசிகர்களை அழுவதா சிரிப்பதா நிலைக்கு ஆளாக்கியுள்ளது.
தற்சமயம் துவண்டு கிடக்கும் விஜய்யின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த சில யோசனைகள்.
யோசனை 1: திருச்சி பிரஸ்மீட்டிங்கில் நான் கலந்துகொள்ளவே இல்லை. என்னைப் போலவே தோற்றம் கொண்ட ஒரு நபரை வைத்து குறிப்பிட்ட சிலர் செய்த சதி இது.அதேபோல் வில்லு என்ற திரைப்படத்தில் நான் நடிக்கவே இல்லை,அதுவும் போலிதான் என அறிக்கை ஒன்றைவிட்டால் ரசிகர்கள் உங்களை நம்பி விடுவார்கள்.
யோசனை 2: இனிமேல் ரிலீஸாகும் உங்கள் படங்களுக்கு கதை என்று ஒன்று இருந்தால் அதை ஒரு பிட் நோட்டீஸில் பிரிண்டு செய்து தியேட்டர் வாசலில் படம்பார்க்க வருபவர்களுக்கு விணியோகிக்கலாம்.
யோசனை 3: இனிமேல் ரீலீசாகும் உங்களின் படங்கள் ஓடும் திரையரங்களில் படம் முடிந்தவுடன், இந்த படத்தின் கதையைச் கண்டுபிடிப்பவருக்கு ஒரு “காண்டாசா கார்” பரிசு என போட்டி வைக்கலாம். கவலையே வேண்டாம் அதை மட்டும் யாராலும் கண்டுபிடிக்க இயலாது
யோசனை 4: டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் கொடுக்கும் போது கூடவே ஒரு சாரிடான் மாத்திரை,ஒரு பிரஸர் மாத்திரை மற்றும் ஒரு வாட்டர் பாக்கெட் சேர்த்து ஒரு பையில் போட்டு, 3டி படங்களுக்கு டிக்கெட்டுடன் கண்ணாடி கொடுப்பது போல கொடுக்கலாம்.
யோசனை 5: திரையரங்கில் ஒவ்வொரு வகுப்புகளுக்கும் தனித்தனியே கைடுகளை(Guide) நியமித்து ஒவ்வொரு சீன் முடிந்த பின்னும் அதில் என்ன வந்தது என்பதை படம் பார்ப்பவர்களுக்கு விளக்கிச் சொல்லலாம்.
யோசனை 6: திரையரங்க வாயிலில் ஆம்புலண்சுடன் கூடிய மருத்துவக்குழுவை தயார் நிலையில் வைத்து படம் பார்த்துவிட்டு வெளியே வரும் முதியவர்கள்,இதயபலகீணமுள்ளவர்கள் ஆகியவர்களுக்கு உடணடியாக முதலுதவி சிகிச்சையளிக்கலாம்.இப்படி செய்தால் அவ்ர்கள் இனி உங்கள் படத்திற்கு நம்பி வருவார்கள். </font>
யோசனை 7: உங்கள் படங்களில் தற்போது காமெடி மிகக்குறைந்து, நீங்கள் சீரியஸாக பேசும் வசணங்கள் மற்றும் பஞ்ச் டைலாக்குகளுக்கு மக்கள் சிரிக்க ஆரம்பித்து விடுகின்றனர். அதனால் நல்ல காமெடி சீன் வைப்பது சிறந்தது.
யோசனை 8: குறிப்பாக நீங்கள் டாக்டர் பட்டம் வாங்கியதை காமெடி சீனாக படத்திலே வைத்தால் அதைப் பார்ப்பவர்கள் விழுந்து,விழுந்து சிரிப்பார்கள். அதுமட்டுமின்றி சிறந்த காமெடிக்கான பிலிம்பேர் அவார்ட்டையும் அந்த சீனுக்கு வாங்கிவிடலாம்
யோசனை 9: டைட்டில் போடும் போது அதில் வரும் இளைய தளபதியை சிலர் தவறாக "இளைய தலைவலி" என படித்துவிடுகிறார்கள். எனவே வேறு பட்டத்திற்கு முயற்சி செய்யலாம். மசாலா புயல் பேரரசுவிடம் கன்சல்ட் செய்தால் அவர் நிச்சயம் ஐடியா கொடுப்பார்.
யோசனை1 0: குருவி,வில்லு போன்ற பேரடிகளை மறக்க கொஞ்ச நாளைக்கு வடிவேலு குரூப்பில் சேர்ந்து சிங்கமுத்து,முத்துக்காளை ஆகியோரைப் போல காமெடி வேடங்களில் நடிக்கலாம். காமெடிக்காக நீங்கள் முயற்சி பண்ண வேண்டாம். நீங்கள் சாதாரணமாக நடித்தாலே மக்கள் சிரிப்பார்கள்.
யோசனை 11: உங்களைக் காமெடி செய்து வீடியோ வெளியிடும் அஜீத் ரசிகர்களுக்கு பதிலடியாக நீங்கள் உடனே ஒரு சாஃப்ட்வேர் குழுவை அமைத்து பதிலுக்கு பதில் வீடியோ விடலாம். கவனமாக இருக்கவும் அந்தக் குழுவில் அஜீத் ரசிகர்கள் இருந்தால் உங்களைத் தாளித்துவிடுவார்கள்.
யோசனை 12: 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைப்பதெல்லாம் பழைய ஃபேஸன். பேசாமல் நீங்கள் 10 ஜோடிக்கு இலவச விவாகரத்து என அறிவித்து அதைத் செயல்படுத்தலாம்.
Thanks : CineSouth






