கலைஞர் டிவியில், சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியில் கமல் - கே.எஸ்.ரவிக்குமார் 'தசாவதாரம் உருவான விதம்' என்ற தலைப்பில் 1 மணி நேரம் பேசினார்கள். கமல் பல விஷயங்களை பற்றி அதில் பேசினாலும் மனதில் சட்டென்று விழுந்த விஷயம் அவர் அன்பே சிவம் குறித்து பேசியதுதான்.
அன்பே சிவம் - வெற்றி பெற்ற தசாவதாரம்
தசாவதாரம் - தோல்வியுற்ற அன்பேசிவம்.
தசாவதாரத்தில் பூவராகவன் அவதாரத்தை - தலித் இளைஞராக இல்லாமல், 'நல்லசிவமாகவே' வந்திருக்கலாம் என்று எனக்கு தோன்றியது. காரணம்...
- கம்யூனிசம் பேசும் நல்லசிவம் - மணல் கொள்ளை பற்றி பேசினால் மக்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொண்டிருப்பார்கள்.
- நல்லசிவம் முகத்தில் தழும்பு இருந்தாலும் நடிப்பு மற்றும் உணர்ச்சி கொப்பளிக்கும். பூவராகவன் முகத்தில் கொட்டை கண்கள்தான் தெரிந்தது.
- நல்லசிவத்தின் அருமையான ஒரு பாத்திர படைப்பு இந்த படத்தின் வாயிலாக ஒரு நல்ல முடிவுக்கு வந்திருக்கும்.
- அன்பே சிவத்தில் ஏற்பட்ட காயத்திற்கு இதில் மருந்து கிடைத்திருக்கும்.
- ஹாலிவுட் பாணியில் ஒரு சின்ன sequel ஆக இருந்திருக்கும்.
கமல் கண்டிப்பாக யோசித்திருப்பார், ஆனா புதுசா வித்தியாசமா செய்யனும்னு நல்ல சிவத்தை அப்படியே விட்டிருப்பார்னு தோணுது. உங்களுக்கு என்ன தோணுது ?
- கணேஷ் சந்திரா