ஒரு ஜோக் ஒரு துணுக்கு
“என்ன சார், பிரயாணம் எல்லாம் சௌகர்யமா இருந்ததா?”
“இல்லைங்க, அப்பர் பெர்த்தைக் குடுத்துட்டாங்க. ரொம்பக் கஷ்டமாப் போச்சு”
“லோயர் பெர்த்காரங்க கிட்டே சொல்லி மாத்திக்க வேண்டியதுதானே?”
“இந்த ஐடியா எனக்கு வராமப் போயிருக்குமா, கீழ் பெர்த்திலே யாருமே இல்லை. யாரைக் கேக்கிறது?”
-------
எம்.ஜி.ஆரோடு போட்ட ஐந்தாண்டு காண்டிராக்ட் முடிந்து செல்வி.ஜெயலலிதா நடித்த முதல் படம் சிவாஜியின் கலாட்டா கல்யாணம்.
அந்தப் படத்தின் துவக்கமே ஒரு பாடல்தான். அது : “நல்ல இடம், நீ வந்த இடம்” - கண்ணதாசன் குசும்பு.

