இது சும்மா..

இது சும்மா..

Ganesh Chandra  //  

Sep 14 / 9:31am

கமல்ஜி : தீர்க்க தரிசி ஐயா


1.  1978ல வந்த சிவப்பு ரோஜாக்களில் டாக்டர் கமலஹாசன் சைக்கோ கில்லர் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். 

ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு பிறகு சைக்கோ ராமன் எனப்படும்  பெண்களை குறி வைத்து கொல்லும் ஒரு கொலையாளி பிடிபட்டார். 

2.1988ல், காதல் மன்னன் கமல் வேலையற்ற இளைஞனாக நடித்த படம் சத்யா வெளியானது. 

89-90களில் நமது தேசம் வேலையில்லா திண்டாட்ட பிரச்சனையை சந்தித்தது.

3. 1992ல் இரு சமுகங்களில் நடக்கும் கலவரம் சம்பந்தமான கதையான தேவர் மகன் 

என்ற படம் வெளியானது. 1993ல் தென்மாவட்டங்களில் சாதி மோதல்கள் தோன்றின

4. பினான்ஸ் கம்பெனிகள் 1996களில் ஏமாற்றி ஓடியது எல்லாரும் அறிந்த ஒன்று, அதை பற்றி 1994ல் வந்த மகாநதியில் கொஞ்சம் தெளிவாகவே சொல்லப்பட்டு விட்டிருந்தது.


5. 2000ல் வந்த இந்து-முஸ்லிம் சச்சரவு பற்றிய படமான ஹேராம் வெளியானது, நாடே அதிர்ந்த கோத்ரா கலவரம் அரங்கேறியது, அதற்கு பின்பே.


6. 2004 டிசம்பரில் வந்த பேரலைக்கு பின்பே டிசுநாமி என்ற வார்த்தை தமிழக மூலை முடுக்கெல்லாம் பரவியது, 

2003ல் வந்த அன்பே சிவமில் டிசுநாமி பற்றி பேசி இருக்கிறார் உலக நாயகன் கமலஹாசன்.


7. இரட்டை சைக்கோ தொடர் கொலையாளிகள் பற்றிய படமனான வேட்டையாடு விளையாடு 2006ல் வந்த பின்பே மொனீந்தர் & சதீஷ் எனும் சைக்கோ தொடர் கொலயாளிகள் நொய்டாவில் பிடிபட்டனர்.

 8, அட இதெல்லாம் பிஸ்கோத்து மேட்டரு, நம்ம ஆழ்வார் பேட்டை ஆண்டவர் காதல் மன்னன், உலக நாயகன் டாக்டர் பத்ம ஸ்ரீ கமலஹாசன் அவர்கள் கடைசியாக நடித்து வெளிவந்த திரைப்படமான தசாவதாரத்தில் அமெரிக்காவில் உலகையே அழிக்கும் ஒரு கிருமி உருவாக்கப்பட்டது போல் கதையமைக்கப்பட்டிருந்தது,

 இன்று இந்தியாவையே கலங்கடிக்கும் ஸ்வைன் ப்ளூ அமெரிக்காவில் இருந்துதான் பரவியது என்பதை யாரும் மறுக்க முடியாத ஒன்று.

9, இன்று(2009-செம்ப்டம்பர்) முதல் உன்னை போல் ஒருவன் ரிசர்வ் செய்யப்படுகிறது. ( ஒரு வேளை சென்னையை சுத்தி ஐஞ்சு இடத்துல யாராச்சும் பாம் வைப்பாங்களோ )


எப்படி எல்லாம் யோசிக்றகங்கப்பா...உக்காந்து யோசிப்பாங்களோ?

தீர்க்கதரிசி ஐயா நீர்..

 

Loading mentions Retweet

0 comments

Leave a comment...

 
Got an account with one of these? Login here, or just enter your comment below.
Posterous-login    Connect    twitter